Wednesday 27 June 2018

பழைய ஊர்களின் புதிய பெயர்கள் அறிவோம்

சில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.

தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது

பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது

வென்க‌ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது

செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது

எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது


குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது

உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா?

ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது

ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்

விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே

வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""
வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல

தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே ,இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார்

கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்" ஆகும்

பாண்டிபசார் என்பதன் உண்மையான பெயர் "சவுந்தரபாண்டியனார் அங்காடி" என்பதே .அய்யா சவுந்தரபாண்டியனும்
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது
மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர்,

குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்

நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்

நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது.

வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு.

தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.

மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்

ஏர்க்காடு

சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.

திருகோணமலை

இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த ‘கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குடிதனைப் பெருக்கிக்
கொடிதனை நெருக்கி வாழும்
கோணமாமலை....

என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும்

Saturday 23 June 2018

சென்னையில் உள்ள கிராமங்கள் வளர்ந்த கதை

சென்னையில் கிராமங்கள் வளர்ந்த கதை


 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர் ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.


 Armed Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி (AVADI)


1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆங்கிலேயரால்  Chrome Leather Factory என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை தொடங்கியதால் அப்பகுதிக்கு குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது


17,18 ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக

இது விளங்கியதால், கோடா பக் (பொருள் - Garden of horses) என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கம் ஆக மாறியது.


  தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டை  ஆக மாறிப்போனது.


  சையத்ஷா என்ற இஸ்லாமிய முக்கிய  பிரமுகர் வைத்திருந்த நிலப்பகுதியின் அடிப்படையில், சையத்ஷாபேட்டை என்றிருந்த பெயர், சைதாப்பேட்டை என்றாகியது. 

 


 உருது வார்த்தையான சே பேக் (பொருள்- Six gardens) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்


 சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.


கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.


சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலம் ஆகி விட்டது.


பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.


சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.


நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தி.நகர் (தியாகராய நகர்) என அழைக்கபடுகிறது


கடற்கரைப்பகுதியான இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.


அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று

காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி* என்றும்

அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லி யாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.


17 ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள

தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.


முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.


மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.


பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.


சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.


திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.


பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் (கேணி) நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு 

திருவல்லிக்கேணி யாகி, தற்போது Triplicane என மாற்றம் கண்டுள்ளது

Friday 22 June 2018

எறும்பூர் கடம்பவனேஸ்வர் திருக்கோயில் வரலாறு

கடம்பவனேஸ்வரர் கோவில்- எறும்பூர்


இக்கோவில் கி.பி 935- இல் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் 

இருங்கோளன் குணவன் அபராஜிதன் என்பவனால் கற்றளியாகக் கட்டப்பட்டதை இங்குள்ள கோவில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது.

மேலும் இவ்வூர் உறுமூர் என்றும் இக்கோவில இறைவன் சிறு திருக்கோவில் பெருமானடிகள் என்றும் அழைக்கபட்டமை கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. இக்கோயிலுள்ள மூன்று தேவ கோட்டச் சிற்பங்களும் தனித்தன்மையை வாய்ந்தவை. தெற்கில் ஞானதட்சினமூர்த்தி வீராசனத்தில் காட்சியளிகின்றார். மேற்கில் சிவன் யோகியாகவும், வடக்கில் பிரம்ம யோகியாகவும் அமர்ந்துள்ளனர்.


இது தமிழ்நாடு தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது 


இக்கோவில் ஊருக்குள் இருந்தாலும் இங்கு  இருக்கும் கோஷ்ட்ட தெய்வங்கள் யோகநிலையில் உள்ளதை பார்க்கும்போது இந்த இடம் சாதரணமாக இருந்திருக்க வாய்ப்பு இல்ல.  கடம்பவனம் நிறைந்த இடமாக அந்த காலகட்டத்தில் இருந்திருக்கலாம். யோகிகளும் ரிஷிகளும் இங்கு தவம் செய்திருக்கலாம்.


நல்ல ஒரு அமைதியான சூழல், அரசமரம் காற்றும், கோவிலின் அமைதியும் நம் மனதை லேசகா மாற்றிவிட்டதை  நான் உணர்தேன். நான் சென்று அனுபவித்ததை நீங்களும் சென்று அனுபவியுங்கள.


பால மலை இயற்கையும் மக்களின் வாழ்க்கையும்

சேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் .



பல கிராமங்களில் பாலமலையில் மக்கள் வாழ்கிறார்கள்.மின்சார வசதி இல்லாமல் வாழும் இவர்களுக்கு சோலார் மின் விளக்கு வசதியில்தான் வாழ்க்கை நகருகிறது.


பாலமலை என அழைக்கப்படும் சித்தேஸ்வரமலையில் காணப்படும் ஊர்கள் தும்மம்பதி.,அணைக்காடு,பெரியகுளம்,ஈச்சங்காடு,நத்தக்காடு,நாகம்பதி, துவரங்காடு,கெம்மம்பட்டி,ராமன்பட்டி ,புள்ளம்பட்டி, நமன்காடு,கருகாமரத்தூக்காடு,தலைக்காடு,சாத்தன மடுவு,


எருக்களாங்காடு, சிங்காரதோப்பு, சோத்தாங்காடு,இடைமலைக்காடூ.பத்திரமடுவு, பெரியணக்காடு. ஆகிய ஊர்களில் மக்கள் அடிப்படை வசதிகளுக்கு சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர் .


கல்விக்காக பள்ளிக்கூடம் பெரியகுளம் பகுதியில் இருந்தாலும் பாலமலை வாழ் மக்கள் குழந்தைகள் கல்வி தேடி குருவரெட்டியூர், சென்னம்பட்டி,கொளத்தூர், சேலம் பகுதிகளுக்கு படிக்கச்செல்கிறார்கள். பாலமலை வாழ் மக்களின் ஒரே நம்பிக்கை தற்போது அரசு அனுமதியுடன் சாலை உருவாக்கி கொண்டிருப்பதுதான் .


100 நாள் வேலைத்திட்டத்தில் தங்களுக்காக தாங்களே சாலை அமைத்து வருகிறார்கள் .சாலை உருவானால் பாலமலை சித்தேஸ்வரர் திருக்கோவில் செல்ல new சாலை உருவாகிவிடும் . பல மூலிகைகளும் உயர்ந்து வளர்ந்த மரங்களும், சுனைகளும் அழகானதாகும் .பாலமலையின் அடர்ந்த வனப்பகுதியாக சிங்காரத்தோப்பு அமைந்துள்ளத 

ஸ்ரீ சித்தேஸ்வரமலை கீழ் பகுதியில் அமைந்த வனமாகும் .இங்கு கரடி. குரங்கு,மான்கள்,காட்டுப்பூனைகள் ,முயல்,காட்டுப்பன்றிகள் வாழ்கின்றன. பயப்படும்படியான விலங்குகள் எதுவும் இல்லை.


உரிக்கொடி போன்ற அபூர்வ மூலிகைகள் இருப்பிடமாக திகழ்கிறது.இயற்கை அழகு சூழ்ந்த பாலமலையை இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தேர்வு செய்யலாம்



. இயற்கையான பாலமலையில் கொய்யா,மாதுளை, பாலாபழம் ,சீதாப்பழம்,நகப்பழம் ,என பலவகையான பழங்கள் கிடைக்கிறது.



ஒரு முறை வந்து சுற்றிப்பார்த்து விட்டு எழுதுங்கள்..